இரா. தாமோதரன் (அறவேந்தன்) புது தில்லி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். தமிழியல் தொடர்பாக பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார்
மூலபாடத் திறனாய்வில் செய்யுள், நூற்பா ஆகியவை கருத்தில்கொள்ளப் பெறுகின்றன.இதுபோன்று உரைகளும் கவனத்தில் கொள்ளப்பெற வேண்டும் என்பதனை நச்சினார்க்கினியர் உரைவழி இந்நூல் சுட்டிக்காட்டுகிறது.
அற இலக்கியம், பக்தி இலக்கியம்,நாட்டுப்புறக் கதைகள்,சிறுகதை,நாவல் தொடர்பான அரிய ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது. நாவல் இலக்கியப் படைப்பாக்கத்தில் 'மதக்கொள்கைகள்' முக்கியப் பங்காற்றுவதனைச் சுட்டிக்காட்டுகிறது இந்நூலின் ஒரு கட்டுரை.
சிங்களவரின் அரசியல் இலக்கிய இலக்கண வரலாற்றைச் சுட்டும் நூல் . சிங்களவரிடம் காணலாகும் வழிபாட்டுமுறையைச் சமூகவியல் அடிப்படையில் விளக்குகிறது.
பெரும்பாணாற்றுப்படைப் பதிப்புகளையும் வெளியீடுகளையும் சேகரித்து விளக்குகிறது . செம்பதிப்பு என்பதற்கான வரைவிலக்கணத்தைச் சுட்டிக் காட்டுகிறது.
குறுந்தொகை ஆய்வு அடைவை இந்நூல் அளிக்கிறது. காலந்தோறும் குறுந்தொகைப் பாடல்கள் மாற்றிப் பொருள்கொள்ளப் பெற்றதற்கும் பெரியாரின் சுய மரியாதை இயக்கத்திற்கும் தொடர்பு உள்ளது என்கிறது இந்நூல்.
பெண்கள், ஆண்களுக்கு நிகராகக் கருதப் பெறாததையும் கருதப்பெற வேண்டும் என்ற சிந்தனை உருவாகாததையும் சாதிய வேறுபாட்டையும் இந்நூல் விளக்குகின்றது.தொல்காப்பியக் கருத்தியலுக்கும் தொல்காப்பிய எடுத்துரைப்பு முறைக்கும் அடிப்படையாக அமையும் சமூக இயங்கியலை இந்நூலின் ஒரு பகுதி எடுத்துக் காட்டுகிறது.
பீடி, சிகரெட், சுருட்டு புகைக்கும் பழக்கத்திற்கான காரணங்களைச் சுட்டுகின்றது . பல்வேறு வயதினர் பல்வேறு தொழில் செய்வோர் ஆண் பெண் இருபாலர் என நூற்றுக்கும் மேற்பட்ட தகவலாளிகளிடமிருந்து தரவு திரட்டி எழுதப்பெற்ற நூல்.
சித்தத்சங்கரவா எனும் சிங்கள மொழியின் முதல் இலக்கண நூலிற்குத் வீரசோழியம் மாதிரியாக அமைந்திருந்ததை விளக்குகிறது இந்நூல்.
செந்தமிழ்ச் செல்வியில் சாம்பசிவசர்மா எழுதிய உரையை இந்நூல் தொகுத்தளிக்கின்றது.உவேசா உரைக்குக் சமகாலத்தில் மேற்கொள்ளப்பெற்ற மற்றொரு முயற்சி இது .
அறவேந்தனின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு உதவி செய்த நல்லோரை நினைவுகூருகிறது.
சமஸ்கிருதத்தில் எழுதப்பெற்ற காவ்யாதர்சம் எனும் அணியியல் நூலைத் தமிழாக்கம் செய்து , தமிழ் அணியியல் சிந்தனைகளோடு ஒப்பிட்டு விளக்குகிறது இந்நூல்.
ஆந்திர சப்தசிந்தாமணி எனும் தெலுங்கு மொழியின் முதல் இலக்கண நூலுக்கும் தமிழ் இலக்கண நூல்களுக்கும் இடைப்பாட்ட உறவை விளக்குகிறது இந்நூல்.
குறுந்தொகைப் பதிப்புகளையும் வெளியீடுகளையும் சேகரித்து விளக்குகிறது. சிறந்த பதிப்பு எது என்பதனையும்,சிறந்த பதிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதனையும் இந்நூல் வழி அறியலாம்.
செந்தமிழ்ச் செல்வியில் சாம்பசிவசர்மா எழுதிய உரையை இந்நூல் தொகுத்தளிக்கின்றது.உவேசா உரைக்குக் சமகாலத்தில் மேற்கொள்ளப்பெற்ற மற்றொரு முயற்சி இது .
அறிஞர் க.ப.அறவாணன் அவர்கள் பகுதி நேரமாக உழைத்துக் கொண்டே படித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்த வரலாற்றை விளக்குகிறது இந்நூல்.
மு.வ வின் நாவல்கள் சிறுகதைகள் ஆகியவற்றில் இழையோடிக் கிடக்கும் கருத்தியலுக்கும் சமகாலச் சமூக இயக்கங்களுக்கும் இடையே நிலவும் தொடர்பினைச் சுட்டிக்காட்டுகிறது இந்நூல்.
குயில் இதழ்களில் வெளிவந்துள்ள பெரியார் தொடர்பான எழுத்துக்களை இந்நூல் தொகுத்தளிக்கின்றது. கடவுள் நம்பிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்தது போன்று பெண் விடுதலையும் சாதிய விடுதலையும் வீரியமாகப் பேசப்பெறாததைச் சுட்டிக் காட்டுகின்றது.
தமிழ்ச் செவ்வியல் படைப்புகளில் இழையோடிக் கிடக்கும் அழகியல் தன்மைகளை எடுத்துக்காட்டுகிறது . குதிரை எனும் விலங்கு சங்க இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பெற்றுள்ள பாங்கினைப் புதிய நோக்கில் எடுத்துக்காட்டுகிறது இந்நூல்.