நேர்மை அர்ப்பணிப்பு இணக்கம்


இரா. தாமோதரன் (அறவேந்தன்)

இரா. தாமோதரன் (அறவேந்தன்)

பணி முறைச் சுருக்கம்

இரா. தாமோதரன் (அறவேந்தன்) புது தில்லி ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். இதற்கு முன்பு பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பிஷப் ஹீபர் கல்லூரி, ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

பிறந்த நாள், ஊர்

16.10.1966 வி. சாத்தனூர், விக்கிரவாண்டி வழி, விழுப்புரம் மாவட்டம்.

கற்பித்தல் அனுபவம்

பேராசிரியர்

11/2013 முதல் ஜவகர்லால்நேரு பல்கலைக்கழகம் - புது தில்லி பேராசிரியர்

பேராசிரியர்

| 03/2011 – 11/2013 பாரதிதாசன் பல்கலைக்கழகம் - திருச்சிராப்பள்ளி விரிவுரையாளர்,

இணைப் பேராசிரியர்

10/2006 – 03/2011 அழகப்பா பல்கலைக்கழகம் - காரைக்குடி

விரிவுரையாளர்

01/2000 – 10/2006 பிஷப் ஹீபர் கல்லூரி - திருச்சிராப்பள்ளி

விரிவுரையாளர்

07/1995 – 01/2000 ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி - புதுக்கோட்டை

நிர்வாகப் பங்காற்றியமை

நிர்வாகத் தலைமைத்துவம்

ஜவகர்லால்நேரு பல்கலைக்கழக இந்திய மொழிகள் மையத் தமிழ்ப் பிரிவின் சார்பாளர். 2013 முதல்.

பாரதிதாசன் பல்கலைக்கழகப் பெரியார் மையத் தலைவர். 2011–2013.

ஒருங்கிணைப்பாளர், மின்னணுச் சுவடியகம். பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி. 2012–2013.

ஒருங்கிணைப்பாளர், அண்ணா ஆய்வு இருக்கை. அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. 2010–2011.

கல்லூரி அளவிலான தமிழ்ப்பேரவைச் செயலர். பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 2004–2005.

ஒருங்கிணைப்பாளர், கல்லூரி அளவிலான வாரத்தேர்வு. ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை. 1995–2000.

ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர். 1998–2000.

தலைமைத்துவம் (பொறுப்பு)

இயக்குநர் (பொ), அண்ணா இருக்கை. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி. 2012–2013.

இயக்குநர் (பொ), பதிப்புத்துறை. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி. 2013.

பிற பணிகள்

ஒருங்கிணைப்பாளர், ஊரக இருத்தல் திட்டம். அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. 2008–2009.

பதிப்பாளர், பல்துறைத் தமிழ் ஆய்வு இதழ். அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. 2009–2011.

ஒருங்கிணைப்பாளர், தமிழ்த்துறை வியாழன் வட்டம். அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. 2009–2010.

பல்கலைக்கழகத் தேர்வுப் பொறுப்பாளர். பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி. 2005.

அலுவலர், நாட்டுநலப் பணித்திட்டம். ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை. 1997–2000.

பல்கலைக்கழகத் தேர்வுப் பொறுப்பாளர். ஜெ. ஜெ. கலை அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை. 1999–2000.

பெற்றுள்ள கல்வி

தமிழ்ப் பல்கலைக்கழகம் | முனைவர் பட்டம் ஒப்பிலக்கணம், 1995

நெறியாளர்: பேராசிரியர் சு. இராசாராம்

புதுவைப் பல்கலைக்கழகம் | ஆய்வியல் நிறைஞர் பட்டம் தமிழ், 1992

நெறியாளர்: பேராசிரியர் க. ப. அறவாணன் புதுவைப் பல்கலைக்கழகம் | முதுகலை தமிழ், 1991

பல்கலைக்கழக முதன்மை ஸ்ரீ. சி. பா. சு. தமிழ்க் கல்லூரி | இளங்கலை (பி. லிட்.) தமிழ், 1989

சென்னைப் பல்கலைக்கழக முதன்மை அரசு மேல்நிலைப் பள்ளி - விக்கிரவாண்டி | மேல்நிலைப்பள்ளிக் கல்வி, கணிதம், 1985

சி. சு. உயர்நிலைப் பள்ளி - மயிலம் | உயர்நிலைப்பள்ளிக் கல்வி பொது, 1982

ஆய்வின் தனிச்சிறப்பு

மரபிலக்கண ஒப்பாய்வு

சமூக வரலாற்றியல் பார்வை

பெரியாரியம்

பெற்ற விருதுகள், பரிசுகள்

இந்தியக் குடியரசுத்தலைவர் விருது (2009)

தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுகள் (2005 & 2010)

அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பரிசு (1993)

நிகரி விருது (2017) முதலானவை